அஸ்ரேலியா-மெல்பர்னில் நடைபெற்ற மாவீரர் நாள் உரையில் சுப.வீ
பகுதி – 1
பகுதி – 2
பகுதி – 3
பகுதி – 4
பகுதி – 5
பகுதி – 6
அஸ்ரேலியா-மெல்பர்னில் நடைபெற்ற மாவீரர் நாள் உரையில் சுப.வீ
பகுதி – 1
பகுதி – 2
பகுதி – 3
பகுதி – 4
பகுதி – 5
பகுதி – 6
This entry was posted on Tuesday, December 16th, 2008 at 9:39 am and is filed under Uncategorized. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
சீமான் கைது, ராஜீவ் காந்தி, பேச்சுரிமை
தமிழகத்திலே யாரைப் பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு என யாரைப் பற்றி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். இந்திய ஜனநாயகம் அதனை தாங்கிக் கொள்ளும். இந்திய ஜனநாயகம் கொடுத்திருக்கிற அந்த அசாத்திய பேச்சுரிமை நம்மை புல்லரிக்க வைக்கும். ஆனால் ராஜீவ் காந்தியை மட்டும் “தமிழகத்தில்” விமர்சனம் செய்து விட முடியாது. உடனே தமிழகத்தின் கதர்வேட்டிகள் வானத்திற்கும், பூமிக்கும் குதிக்க தொடங்கி விடுவார்கள். ஒரு மிக சாதாரண விமர்சனத்திற்கு கூட தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எரிச்சலை ஏற்படுத்துகிறது. இந்திய ஜனநாயகம், பேச்சுரிமை என இனி யாராவது பேசினால் எரிச்சல் தான் ஏற்படும்.
இந்த விடயத்தில் சீமான் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் சீமானை நான் பாராட்டியாக வேண்டும். தமிழகத்தின் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், “முற்போக்கு” எழுத்தாளர்கள், “மாற்று” எழுத்தாளர்கள், சமுதாயத்தை புரட்டி போடும் சிந்தனையாளர்கள் என யாருக்குமே ராஜீவ் காந்தி மீது எந்த விமர்சனமும் வைக்க கூடாது என்ற தமிழகத்தின் காட்டு தர்பாரினை எதிர்க்க வேண்டும் என்ற தைரியம் வந்ததில்லை. சீமான் முதல் முறை கைது செய்யப்பட்ட பிறகும், இம் முறை பேசினால் “மறுபடியும்” கைது செய்யப்படுவோம் என தெரிந்தும் ராஜீவ் காந்தியை விமர்சித்து பேசியுள்ளார். இது அவரது அசட்டு தைரியமா அல்லது கைது செய்யப்படுவோம் என தெரிந்தே பேசினாரா என தெரியவில்லை.
சீமான் விளம்பரத்திற்காக பேசினார் என்று சொன்னால் அதனை நம்புவதற்கில்லை. வைகோ, நெடுமாறான் போன்றோர் கைதினையே எந்த எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தான் தமிழர்கள். இவ்வாறு பேசுவதால் சீமானுக்கு எந்தப் புதிய விளம்பரமும் கிடைக்கபோவதில்லை. ஆதாயங்கள் கூட இல்லை. பாதகங்கள் தான் அதிகம். சீமானின் கைதினை யாரும் எதிர்க்க போவதில்லை. இரண்டு நாள் அறிக்கைகள், பிறகு தங்கள் வழக்கமான வேலைகள் என அரசியல்வாதிகள் மாறி விடுவார்கள். காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்திருப்பது போல தேசிய பாதுகாப்புச் சட்டம் வேறு சீமானை பயமுறுத்துகிறது.
கடந்த முறையும் சரி, இம் முறையும் சரி சீமான் இந்திய தேசியத்தை பிளவு படுத்தவோ, இந்திய தேசியத்தை மறுத்தோ கூட பேசவில்லை. ராஜீவ் படுகொலையை கடந்து ஈழப் பிரச்சனையை பார்க்க வேண்டிய தேவையை தான் சீமான் முன்னிறுத்தினார். ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படையை அனுப்பிய நோக்கத்தினை தான் கேள்விக்கு உட்படுத்தினார். ராஜீவ் காந்தியின் அமைதிப்படை ஈழத்திலே செய்த போர் குற்றங்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடக்கம் லண்டன் பத்திரிக்கைகள் வரை இந்திய அமைதிப்படை ஈழத்திலே செய்த வெறியாட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளன. இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திய அமைதிப்படையின் வெறியாட்டம் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை தமிழகத்திலே பேசக்கூடாது, பேசினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும், சிறையில் போடுவோம் என்பது ஜனநாயக நாட்டின் அறிகுறி அல்ல. சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு.
அது போல சீமான் பயங்கரவாத இயக்க தலைவரை ஆதரித்து பேசினார் என்பதாக மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. சீமான் அவ்வாறு பேசவில்லை. பிரபாகரன் மேல் தனக்கு இருக்கும் அபிமானத்தை வெளிப்படுத்தினார். ஒரு ஜனநாயக நாட்டில் இந்த பேச்சுரிமை கூட இல்லையா ? இந்திய அரசியல் சாசனம் அமைதியான வழியில் குரல் எழுப்ப அனுமதிக்கிறது. வைகோ கைது செய்யப்பட்ட வழக்கில் கூட நீதிமன்றம் பேச்சுரிமையை வலியுறுத்தியுள்ளது. பிரபாகரனுக்கு ஆதரவாக மட்டுமில்லாமல், விடுதலைப் புலிகளை ஆதரித்தும் கூட அமைதியாக தங்கள் கருத்துக்களை பேசலாம், எழுதலாம். அவ்வாறான சூழலில் காங்கிரஸ் கட்சியை அமைதிப்படுத்த சீமானை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.
கலைஞர் குறித்து நாம் வைக்கும் எந்த விமர்சனத்தையும், ஜெயலலிதா ஆட்சியிலே இது போல பேசி விட முடியுமா என்ற வாதம் மூலம் தமிழகத்திலே திமுக ஆதரவாளர்கள் திமுகவின் ஜனநாயக, தமிழ் விரோதப் போக்கினை நியாயப்படுத்த முனைகின்றனர். ஜெயலலிதா ஆட்சியில் நடந்த சர்வாதிகாரப் போக்கினை காட்டி கலைஞர் செய்து கொண்டிருக்கும் ஜனநாயக விரோதப் போக்கினை நாம் நியாயப்படுத்தி விட முடியாது. ஜெயலலிதா தமிழர் அல்ல என கலைஞரே கூறியிருக்கிறார். ஆனால் கலைஞரை “தமிழினத்தலைவர்” என திமுகவினர் கூறுகிறார்கள் (திமுகவினர் மட்டும் தான் கூறுகிறார்கள்). தமிழினத்தலைவராக கூட தேவையில்லை. குறைந்தபட்சம் ஒரு தமிழராக தமிழகத்திலே ஈழத்தமிழர் பிரச்சனையை முழுமையாக விவாதிக்க/பேச ஒரு களம் அமைக்க திமுக ஏன் தொடர்ந்து மறுத்து வருகிறது ? காங்கிரஸ் கட்சியின் தங்கபாலு சீமானை கைது செய்ய வேண்டும் என்றவுடன் பாய்ந்து சென்று சீமானை கைது செய்யும் கலைஞர், தில்லிக்கு சென்று “அவரே” முன்வைத்த கோரிக்கைகளை காங்கிரஸ் இது வரை நிறைவேற்ற வில்லையே என்ற கேள்வியை எழுப்பி இருக்கலாம். ஓ…அது கலைஞர்-காங்கிரஸ் கூட்டு நாடகம் அல்லவா. அதனால் தான் கலைஞர் அமைதியாக உள்ளார். டெல்லியின் எடுபிடிகள் தமிழக காங்கிரஸ் மட்டும் அல்ல. திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் தான்.
சீமான் மீது எனக்கு விமர்சனமும் உண்டு. சீமான் மீது மட்டும் அல்ல. பொதுவாக தமிழகத்திலே இருக்கும் அனைத்து தலைவர்கள் மீதான எனது விமர்சனமும் கூட. ஈழப் பிரச்சனையை உணர்ச்சிமயமாக பேசி தயவு செய்து பிரச்சனையை திசை திருப்பாதீர்கள். இது உணர்வுப்பூர்வமான பிரச்சனை தான். அதே நேரத்தில் இதனை அமைதியான முறையில் தமிழகத்து மக்கள் மத்தியில் முன்வைக்க வேண்டும். ஈழத்திற்கே இன்னொரு பிரபாகரன் தேவையில்லை என நினைப்பவன் நான். தமிழகத்திற்கு இன்னொரு பிரபாகரன் எதற்கு ? எனவே உணர்ச்சிமயமாக பேசுவதை விடுத்து பிரச்சனைகளை பேசுங்கள். ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களை பேசுங்கள். இந்திய அமைதிப்படை செய்த போர் குற்றங்கள் குறித்து ஆதரப்பூர்வமாக பேசுங்கள். உணர்ச்சிமயமாக பேசிப் பேசியே தமிழகத்தில் நீங்கள் விதைத்த “தனித்தமிழ்நாடு” போன்ற அச்சம் போதும். நீங்கள் இவ்வாறு பேசுவது தமிழ் மக்களின் எதிரிகளுக்கு தான் சாதகமாக அமைந்து விடுகின்றது. தமிழர்களுக்கு இதனால் எந்த நன்மையும் இல்லை.
ஈழப் போராட்டம், இந்திய பூச்சாண்டிகள், விகடனின் Half-truth சர்வே…
விடுதலைப் புலிகள் மற்றும் ஈழப் போராட்டம் குறித்த சமீபத்தைய விகடனின் கருத்து கணிப்பு பல காலங்களாக தமிழகத்தில் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டிருந்த போலியான கருத்தாக்கத்தை தகர்த்து உள்ளது. ராஜீவ் படுகொலைக்கு பிறகு தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என்று இந்தியாவில் உள்ள ஊடகங்கள் தொடர்ந்து கூறி வந்ததை இந்த கருத்து கணிப்பு தகர்த்து இருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்கான தமிழ்நாட்டின் ஆதரவு குறித்து பல கட்டுரைகளில் எழுதி, அந்த விவாதங்கள் ராஜீவ் படுகொலை என்ற வட்டத்திற்கே வந்து விடுவதில் ஏற்பட்ட சோர்வு காரணமாக, விகடன் கருத்து கணிப்பு குறித்து உடனே எழுத வில்லை. அதனால் தாமதமாக இந்தப் பதிவு வெளியாகிறது.
இன்றைக்கு தமிழ் ஈழத்தை எதிர்க்கும் பலர், 1991க்கு முன்பும் தமிழ் ஈழத்தை எதிர்த்தே வந்திருக்கின்றனர். அவர்களுக்கு அன்றைக்கு கிடைத்த காரணம் தமிழ் ஈழம் அமைந்தால் தனித்தமிழ்நாடு அமைந்து விடும் என்பது தான். ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தனித்தமிழ்நாடு என்ற பூச்சாண்டிக் கதையை ராஜீவ் படுகொலை கொண்டு நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அடிப்படையான தேவை ஒன்று தான் – தமிழ் ஈழம் எக்காரணம் கொண்டும் அமைந்து விடக்கூடாது.
1991க்கு பிறகு விடுதலைப் புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு இல்லை, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தமிழ் ஈழம் குறித்து எதுவுமே தெரியாது, பிராபகரன் தவிர தமிழ்ச்செல்வன் யார் என்று கூட தமிழகத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பன போன்ற பல்வேறு கதைகளை ஊடகங்கள் தொடர்ந்து பரப்பி வந்தன. இந்தக் கதைகள் பொய்க் கதைகள் என நமக்கு தெரிந்தாலும் அதனை நம்மால் வலுவாக மறுக்க முடியவில்லை. ஏனெனில் அதனைச் சார்ந்த கருத்து கணிப்பு எதுவும் எடுக்கும் தைரியம் தமிழகத்தில் இருந்த எந்த பத்திரிக்கைக்கும் இருந்ததில்லை. அப்படியே வேறு ஏதேனும் பத்திரிக்கைகள் செய்திருந்தாலும், அந்த பத்திரிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்திருக்கும்.
உதாரணத்திற்கு நக்கீரன் இப்படி ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் ? அந்தக் கருத்துக்கணிப்பின் நம்பகத்தன்மை, அந்த இதழின் நம்பகத்தன்மை, அந்த பத்திரிக்கை ஆசிரியரின் நம்பகத்தன்மை, புலிகளுக்கும் – நக்கீரனுக்கும் இருக்கும் தொடர்புகள் போன்ற பல்வேறு கேள்விகள் எழுப்பபட்டிருக்கும்.
ஆனால் 80 ஆண்டு கால ”பாரம்பரியம்” மிக்க விகடன் இதழ் சொல்லும் பொழுது அந்த கருத்துக்கணிப்பிற்கு இருக்கும் நம்பகத்தன்மையே தனி தான். அதனை இன்றைக்கு கண் கூடாக காண முடிகிறது. விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் வாய்மூடி அமைதியாக இருக்கிறார்கள். விகடனா இப்படி ஒரு சர்வே எடுத்திருக்கிறது என்ற ஆச்சரியம். அவர்களாலேயே இதனை நம்ப முடியவில்லை. வேறு ஏதேனும் பத்திரிக்கைகள் இந்த கருத்துகணிப்பை எடுத்திருந்தால் நொடிப்பொழுதில் அதன் தேசபக்தியை கேள்வி கேட்டு கருத்துகணிப்பின் நம்பகத்தன்மையை தகர்த்து இருக்க முடியும். ஆனால் விகடன் ஆயிற்றே ? 80 ஆண்டு கால ”பாரம்பரியம்” மிக்க தங்களுக்கு நெருக்கமான விகடனை என்ன செய்ய முடியும் ? வாய்மூடி மொளனமாக மட்டுமே இருக்க முடியும். அதைத் தான் தற்பொழுது செய்து கொண்டிருக்கிறார்கள்.
ராஜீவ் காந்தி படுகொலை என்ற ஒன்றினை மையப்படுத்தி தமிழகத்தில் புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என கூறி வந்த பத்திரிக்கையாள பூச்சாண்டிகளான என்.ராம், மாலன், வாஸந்தி, சோ போன்றோரும், முன்னாள உளவாளிகளான பி.ராமனும், ஹரிஹரனும் வாயடைத்து போய் கள்ள மொளனம் சாதிக்கிறார்கள். அவர்களை வாய் மூட செய்த ஒரு காரணத்திற்காவது நான் விகடனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
தொடர்ந்து பல காலமாக தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கான ஆதரவு தளம் உள்ளது என கூறிவந்த என்னைப் போன்ற பல ஈழ ஆதரவாளர்களின் நிலைப்பாட்டினை இந்த கருத்துகணிப்பு உறுதி செய்கிறது.
அரசியல்வாதிகளின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் Vikatan survey vindicated our stand.
******
விகடனின் இந்த கருத்து கணிப்பு வரவேற்கபட வேண்டிய ஒன்று தான். என்றாலும் விகடனின் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.
ஈழப் பிரச்சனையை பொறுத்த வரை இந்திய ஊடகங்கள் எப்பொழுதுமே இந்தப் பிரச்சனையை இந்தியாவின் பார்வையில் இருந்து தான் அணுகியிருக்கின்றன. தமிழர்களின் பார்வையில் இருந்து இந்தப் பிரச்சனையை எந்த ஊடகங்களும் பார்த்ததில்லை. தங்களின் தனிப்பட்ட கருத்தினையே தமிழக மக்கள் மீது திணித்து இருக்கின்றன. செய்திகள் தணிக்கை செய்யப்பட்டிருக்கின்றன. விகடனின் கருத்து கணிப்பும் அதைத் தான் இங்கு செய்கிறது.
இந்தியாவின் பார்வையில் ராஜீவ் காந்தியின் படுகொலை குற்றம் என்றால் ஈழத் தமிழர்களின் பார்வையில் இந்திய இராணுவம் ஈழத்தில் தமிழர்கள் மீது தொடுத்த மிக மோசமான படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ராஜீவ் காந்தியின் படுகொலையை விட மோசமான குற்றங்கள். இந்திய இராணுவம் தமிழர்களை கொன்றதால் தான் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் இந்திய இராணுவம் சென்னை திரும்பி வந்த பொழுது, அந்த வரவேற்பை புறக்கணித்தார். என் இனத்தை கொன்று விட்டு வரும் ஒரு இராணுவத்தை தன்னால் வரவேற்க முடியாது என கலைஞர் கூறினார்.
இந்திய இராணுவம் செய்த பல மோசமான அத்துமீறல்களில் வல்வெட்டிதுறை படுகொலை மிக முக்கியமான ஒன்று. அது குறித்த மிக விரிவான செய்தி ஒன்றினை அப்பொழுது இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டு இருந்தது. வல்வெட்டி துறையில் தமிழர்களை வரிசையாக நிற்க வைத்து இந்திய இராணுவம் சுட்டுக் கொன்றது. ஜாலியன் வாலாபாக், My Lai போன்ற படுகொலை சம்பவங்களை விட மோசமான படுகொலை வல்வெட்டி துறை படுகொலை. இதனை செய்த குற்றவாளிகள் இந்திய இராணுவத்தினர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையை இந்தச் சுட்டியில் படிக்கலாம்.
Click to access Massacre_at_Valvetti_-_Indian_Express.pdf
இந்தியாவின் பாரளுமன்றத்தில் இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினருமான ஜார்ஜ் பிரணாண்டஸ் பின்வருமாறு கூறுகிறார்.
“When in early August, 1987, I had said that Mr. Rajiv Gandhi’s military adventure in Sri Lanka would be India’s Viet Nam, I had not anticipated that India’s Viet Nam would also have its own My Lai. Of course, I was aware and I had also said repeatedly that soldiers everywhere alike, their training and the rigours of their life, not to speak of the brutalisation caused by war, making them behave in the most inhuman ways when under pressure.
That is why when in the early days of India’s military action in Sri Lanka, stories of rape and senseless killings by Indian soldiers came to be contradicted by the India government publicists I joined issue with everyone who came to accept that our soldiers were cast in the mould of boy scouts who went around the fighting fields of Sri Lanka looking out for opportunities to do their day’s good deeds, particularly for damsels in distress.
Now, in Velvlettiturai, the Indian army has enacted its My Lai. London’s Daily Telegraph commenting editorially on the barbarism exhibited by the Indian army in Velvettiturai says that, if anything “this massacre is worse than My Lai. Then American troops simply ran amok. In the Sri Lankan village, the Indians seem to have been more systematic; the victims being forced to lie down, and then shot in the back”.
இவ்வாறு இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடங்கி, லண்டன் பத்திரிக்கைகள் வரை பட்டியலிட்டு இருக்கின்றன.
ஈழப் பிரச்சனையின் ஒரு முக்கியமான பரிமாணமான இந்திய இராணுவத்தின் அத்துமீறல்கள், போர் குற்றங்கள் குறித்து விகடனின் சர்வே ஏன் தமிழக மக்களிடம் கேள்வி எழுப்பவில்லை. சிவராசனும், சுபாவும், தனுவும் செய்த படுகொலைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பொறுப்பு என்றால் இந்திய இராணுவம் செய்த தவறுகளுக்கு இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி பொறுப்பு இல்லையா ?
அப்படியெனில் ஈழத் தமிழ் மக்கள் மீது வன்முறை தாக்குதலை தொடுத்த ராஜீவ் காந்தி குற்றவாளியா, குற்றமற்றவரா, மன்னித்து விடலாமா என்ற கேள்விகளை விகடன் ஏன் முன்வைக்க வில்லை என்ற கேள்வியை நான் எழுப்ப விரும்புகிறேன்.
see the partiality of dinamalar news.now it is created fight between congrass and viduthalai siruthaikal.so it biasing the main issue.it crate fight between tamilans. thats what dinamalar wants?so if possible talk with leaders avoid this situation
tamilwin.com
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டி- இரணைமடு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதல் சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளதாகப் புலிகள் தெரிவித்துள்ளதுடன்,
இத்தாக்குதலின்போது 40 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் உயிரிழந்த படையினரின் 10 சடலங்களை மீட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிர்பாராத அதிரடித் தாக்குதலினால் சிறிலங்கா படையினர் கடந்த சில வாரங்களாக பாரிய இழப்புக்களுடன் கைப்பற்றியிருந்த 2 கிலோ மீற்றர் நீளமான அரண் பகுதியை கைவிட்டு பின்வாங்கி ஓடினர்.
முறிகண்டியில் உள்ள இரணைமடு பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதல் இந்த முன்னரண் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட முன்னரணே விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டது.
இந்த அதிரடித்தாக்குதலின் போது படையினருக்கு ஒத்துழைப்பாக வான்படையின் வானூர்திகள் செறிவான தாக்குதலை நடத்தின என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinamalar
கொழும்பு: இலங்கையில், விடுதலைப்புலிகளின் ஆதரவு கப்பலை கடற்படையினர் அழித்ததில், 20 விடுதலைப்புலிகள் உயிரிழந்துள்ளனர் என ராணுவ அமைச்சரகம் நேற்று தெரிவித்தது. இதுகுறித்து இலங்கை ராணுவ அமைச்சரகம் கூறியதாவது: இலங்கையின், முல்லைத்தீவிற்கு வடகிழக்கு பகுதியில் 70 கடல் மைல் தொலைவில், விடுதலைப்புலிகளின் ஆதரவு கப்பல் ஒன்றை கடற்படையினர் நேற்று அழித்தனர்.
இலங்கை கடற்படையைச் சேர்ந்த கடற்கரை ரோந்து கப்பல், கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, விடுதலைப்புலிகளின் கப் பலை கண்டுபிடித்தனர். உடனே கப்பற்படையினர், அந்த கப்பலை தடுத்து நிறுத்தி அதை அழித்து விட்டனர். அந்த கப்பலில் ஏராளமான போர்க்கருவிகள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து வந்த நான்கு படகுகளையும், ராணுவத்தினர் வழிமறித்து அழித்தனர். இந்த தாக்குதலில் 20 விடுதலைப்புலிகள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு ராணுவ அமைச்சரகம் தெரிவித்தன.
http://agk91.blogspot.com/search/label/யார்%20இந்திய%20இறையாண்மைக்கு%20எதிரானவர்%3F
இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் யார் என்ற புரிதல் குறித்து எனது எண்ணங்களை பதிவு செய்ய முற்படுகின்றேன். இயக்குனர் சீமான் கைது மற்றும் பலர் கைது என்று பல சம்பவங்கள் நடக்கின்றது. இதன் பின்னணி என்னவெனில் இவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்பதே. இந்த விடயத்தில் யார் இந்தியா என்னும் கூட்டாட்சிக்கு எதிரனவர்கள் என்பது குழப்பமாகவே உள்ளது.
நான் புரிந்து கொண்ட இந்திய தேசியம் என்பது பல்வேறு இனங்கள் தமக்கே உரித்தான மொழி கலாச்சாரம் பிரதேசம் போன்ற சிறப்புடன் கூட்டாக வாழும் ஒரு இடமே இந்தியா. இங்கே இந்திய தேசியம் என்பது அந்தந்த இனங்களின் தனித்துவ அலகுகளை தாண்டி தனித்து எதுவும் இல்லை என்பதே எனது புரிதல். இந்தியாவில் வாழும் அனைத்த இனங்களினதும் தனித்துவ அலகுகளை சரிசமமாகவும் மதிப்புடனும் ஒருமைப்படுத்துவதே இந்திய தேசியமாக இருக்க முடியும். இந்த நிலை இலங்கை பேரினவாத அரசால் மீறப்பட்ட போதே ஈழத்தில் சிக்கல் ஏற்பட்டு இன்றுவரை சொல்லெண்ணா துயரத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.
எளிய முறையில் சொல்வதானால் தாய்க்கு நல்ல மகனாய் இருத்தல் குடும்பத்துக்க நல்ல உறவாயிருத்தல், சமுகத்துக்கு நல்ல குணவானாய் இருத்தல், தன் இனப் பற்றுடன் இருத்துல் என்ற அடிப்படையிலே தான் நாட்டுக்கு நல்ல குடிமகனாக இருக்க முடியும். தமிழன் தமிழனா இருப்பதும், மலையாளி மலையாளியாய் இருப்பதும், பஞ்சாபி பஞ்சாபியாய் இருப்பதும், கன்னடர் கன்னடராக இருப்பதும், அவரவர் அவரவருக்குரிய தனித்துவத்துடன் இருப்பதும். ஒருவனை ஒருவன் எறி மிதித்து உதாசீனப்படுத்தாமல் இருக்கும் அந்த பண்பே இந்தியனாக தொடர்ந்து இருக்க விழிசெய்கின்றது. ஆனால் இந்திய இறையாண்மை பேசுகின்றவர்கள் நிலமை தூர நோக்கில் ஆபத்தாகவே உள்ளது.
தமக்குரிய இனப்பற்றையும் உணர்வையும் தமக்கே உரித்தான சிறப்புகளையும் அம்சங்களையும் நிராகரித்து இந்தியனாய் இரு என்று உரைக்கப்படுகின்றது. இந்த நிலையே இந்திய இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அடிப்படையில் எதிரானது. இதுவே இந்தியா நாளை சிதறிப்போக வழிகோலும். இந்தியர் என்ற உணர்வு உறுதியாக இருக்க வேண்டுமானால் ஒவ்வொரு இனங்களினதும் தனித்துவம் சம உரிமையுடன் பேணப்படுதல் அவசியமாகின்றது.
இந்தியாவில் வாழும் அனைத்து இன மக்களினதும் மொழி பண்பாடு கலச்சாரம் வாழ்விடம் போன்ற தேசிய காரணிகள் பேணப்படுவதும், சம உரிமையுடனும் மதிப்புடனும் நடுவண் அரசால் அணுகப்படுவதும் அவசியமானது. இவற்றில் ஏற்றதாழ்வுகள் உருவாகும் போது கூட்டாட்சிக்கு பங்கம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். இது எனது ஈழத்து அனுபவத்தில் இருந்து உணர்வது.
இப்போது உணர்ச்சி வசப்பட்டு பேசியவர்கள், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியவர்கள் என்ற குற்றச் சாட்டுக்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் உண்மையாக இந்திய இறையாண்மையை வலியுறுத்த பாடுபட்டுள்ளனர் என்பதே தூர நோக்கில் தெரியவரும்.
நானுறூக்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை அரசு கொல்கின்றது. இந்த மீனவர்கள் தமிழர்களா இந்தியர்களா? ஏன் இப்படி ஒரு கேள்வி வருகின்றது? இந்தியர்கள் எனில் ஏன் இந்திய அரசு அவர்கள் கொலைக்கு நடவடிக்கை எடுக்கவில்லை? இதே ஒரு நிலமை வடமாநிலத்தில் உள்ளவர்களுக்கு நடந்திருந்தால் இந்திய நடுவண் அரசின் நிலை இதே போல் தான் இருந்திருக்குமா? இந்த மீனவர்கள் தமிழர்களா அல்லது இந்தியர்களா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றது. இந்த மீனவர்கள் தம்மை ஒரு இந்தியனாக காப்பாற்ற முடியாத போது தமிழனாக காப்பாற்ற முனைவது இயற்கையின் விதியாகும். ஈழத் தமிழர்கள் தங்களை ஒரு இலங்கையர் என்ற அடிப்படையில் காப்பாற்ற முடியவில்லையே !
இந்த நிலை குறித்து கேள்வி கேட்டவர்களின் நோக்கம் என்ன? ஏன் காப்பாற்ற வில்லை? ஏன் இந்திய மீனவர்களை கொல்பவனுக்கு ஆயுதம் வழங்குகின்றாய்? ஏதற்காக? இவ்வாறு கேட்டால் நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதே எதிர்பார்ப்பு. அந்த நடவடிக்கையின் பிரகாரமே இந்த மீனவர்கள் தொடர்ந்தும் இந்தியர்கள் என்ற எண்ணப்பாட்டில் நம்பிக்கையுடன் இருப்பார்கள். ஆனால் கேள்வி கேட்பதே தப்பு, இந்தியாவுக்கு எதிரானது என்றல்லவா சொல்லப்படுகின்றது. இது தொடர்ந்து மீனவர்கள் கொல்லப்படட்டும், மத்தியரசு கண்மூடி இருக்கட்டும், தமிழகம் கொதிக்கட்டும் மாநில வாரியான பிரச்சனைகளும் பிரிவினைகளும் வரட்டும் என்றல்லவா தூர நோக்கில் உள்ளது.
இதே போல் தான் ஈழத் தமிழர் பிரச்சனையும். இதில் என்ன வித்தியாசம் எனில் இனத்தால் ஒன்றாக இருந்தபோதும் இடையில் கடல் பிரிக்கின்றது. ஆனால் இன உணர்வு ஒன்று தானே? தனது இனத்தை கொல்வதற்கு துணைபோக வேண்டாம் என்று பேசுவதில் என்ன தவறு இருக்கப்போகின்றது? இதை மத்தியரசு செவி சாய்க்காத போது மத்தியரசு மீதான பற்றும் இந்தியன் என்ற உணர்விலும் கேள்வி எழுகின்றது. இதுவே யதார்த்தம். இன்று ஈழத்தமிழனுக்கு நாளை தமிழக தமிழனுக்கு என்று மக்கள் சிந்திப்பார்கள். இது தவிர்க்கப்பட வேண்டுமாயின் மத்தியரசு தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்த உணர்வுகளை உதாசீனம் செய்யும் போது மக்கள் கோவப்படுகின்றார்கள், அதையே அடக்க முற்படுகின்றனர் தவிர பிரச்சனையை தீர்க்க முயலவில்லை. இது அடக்க கூடிய விசயம் இல்லை. ஒரு அணையில் எல்லையை தாண்டி நீர் நிரம்பினால் அணையை திறந்து நீர் மட்டத்தை குறைக்க வேண்டும் இல்லாவிடில் அணை உடைந்து பாரிய நாசத்தை ஏற்படுத்தும். இன உணர்வும் அவ்வாறானதே.
ஈழத்து பிரச்சனை இந்திய மீனவர்களை இலங்கை அரசு கொல்லும் பிரச்சனை நதிநீர் பிரச்சனைகள் போன்ற குறிப்பிட்ட மாநிலத்தில் வாழும் இனத்தை பாதிக்கும் பிரச்சனைகளின் அடிப்படையில் மாநில மக்களின் உணர்வுகள் தமது இனம் குறித்தும் தனித்துவம் குறித்தும் கேள்விகனை உண்டாக்கும்.
இதே ஈழப்பிரச்சனை ஆரம்பத்தில் கல்வியில் பிரச்சனை, தனிச் சிங்களச் சட்டம், பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றம் என்று ஆரம்பித்து இன்று அவலங்கள் எல்லை மீறிப் போய் நிற்கின்றது.
ஈழத் தமிழனாக நாம் போரால் படும் அவஸ்த்தைகள் போதும். அன்று இலங்கை ஆழும் சிங்கள அரசு தமிழர்களையும் சம உரிமையுடன் நடத்தியிருந்தால் நாம் இன்று ஏன் இவ்வளவு கொடுமையை அனுபவிக்க வேண்டும்? ஏன் பிரிவினையை கோரியிருக்க வேண்டும். போராட்டமும் அதன் வலிகளும் எந்த இனத்துக்கும் வரக் கூடாது என்பதே போரும் அவல வாழ்வும் எமக்கு கற்றுத் தந்த கடைசிப்பாடம். இதை அனுபவித்தால் தான் புரியும். பிரிவினை என்ற நிலை இந்தியாவுக்குள் வரக் கூடாது. வருவதற்குரிய அடித்தளமும் இடப்படக் கூடாது. ஆனால் இடப்படுகின்றது. இது சீமானால் அல்லது மணியால் இடப்படுகின்றது என்பது தூர நோக்கில் உண்மை இல்லை. காங்கிரஸ் மற்றும் சில குறிப்பிட்ட தரப்பினரின் வரட்டுப்பிடிவாதத்தால் இடப்படுகின்றது. அதன் எதிர்ப்பு வடிவத்தையே அடக்க முற்படுகின்றனர். பிரச்சனைகளுக்குரிய அடிப்படை காரணிகளை சரிப்படுத்துவதை விடுத்து அது வளர்க்கப்படுகின்றது பின்னர் அதில் அரசியல் நடத்தப்படுகின்றது.
எனது அனுபவ அறிவில் உலகில் விசேடமாக இந்தியாவில் பிரிவினைவாதம் போன்றன வரக்கூடாது என்பதே ஈழப்போர் உணர்த்தும் பாடம் என்று சொல்கின்றேன். இனங்கள் தங்களது இன உணர்வை பின்தள்ளி சாதீய உணர்வை முன்நிறுத்தி வர்க்க உணர்வை முன்நிறுத்தி வரலாறு தெரிந்த காலந்தொட்டு நகர்ந்து வருகின்றது. இதன் தாக்கம் ஈழத்தில் இனத்துக்கான போராட்டத்தில் பேயாட்டம் ஆடுகின்றது. எம்மில் இன்று சாதியம் வர்க்கம் கடந்த நிலையில் இன உணர்வு பெருகி இருக்கலாம் ஆனால் இந்த பிரச்சனைகள் வளர்த்துவிட்ட பிடிவாத மானுடத்துக்கு விரோதமான குணம் என்னும் என்னும் மறையவில்லை. நாம் ஒன்றுபட்ட நிலையில் முப்பது வருட போரட்டத்திற்கு பின்னும் பூரணத்துவம் அடையவில்லை. சாதீய பிரதேச வர்க்க வாரியாக பிரிந்தே கிடக்கின்றோம்.
இனத்துக்கான போராட்டம் கொடுத்த நிர்பந்தம் இதில் உடைவை ஏற்படுத்துகின்றது ஒரு சாதகமான விடயம் ஆனால் அவ்வாறு உணர்ந்த இன உணர்வில் தமிழினம் என்ற காரணத்துக்காக இங்கே எந்த உயர்ந்த சாதியும் தாழ்ந்த சாதியும் அல்லது மதங்களை கலந்து திருமணம் செய்வதி்ல்லை. விதிவிலக்காக சிலது நடப்பதை புதிய இன உணர்வு மேலோங்கியதால் வந்த விழைவு என்று அர்த்தமில்லை. இயல்பான அந்த தன்மை அடுத்தடுத்து தலைமுறைகளில் சாத்தியப்படலாம்.
எமக்குள் இன ஒற்றுமை இல்லாமல் போனதற்கு காரணம் எமக்குள் இருந்த பல்வேறு பிரச்சனைகள். இன்றும் ஆழுக்கொரு திசையில் ஒன்றுபட முடியாமல் போவதற்கு காரணமும் இந்த பிரச்சனைகள் வளர்த்துவிட்ட பிடிவாத குணம். அனுசரிக்க முடியாத குணம் என்று பலவிதமான ஆழுமைகள் ஆகும். இவ்வாறான எமது உள்ளக பிரச்சனைகளே சிங்கள பேரினவாத அரசுக்கு மிக மிக சாதகமான விடயமானது.
எமது இனத்தின் இந்த சிக்கல் நிறைந்த பிரச்சனை இந்தியாவில் உள்ள அனைத்து இனத்திற்கும் பொருந்தும். பிரிவினை எண்ணங்கள் இன அடிப்படையில் எழுமானால் அந்த இனம் மிகப் பெரிய அவலத்தை சந்திக்கும். அதே நேரம் இன உணர்வு இல்லாமல் போனால் உள்ளக சிக்கல்களும் தீராது. குறித்த மாநிலத்தில் உள்ள மக்கள் ஒடுக்கப்படுவர். அதை தட்டிக்கேட்பதில் ஒற்றுமை இல்லாது எது பிழை எது சரி என்ற புரிதல் அற்று ஏராளமான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
இவ்வாறான சிலந்திவலைபோல் சிக்கலான முரண்பாடுகளை உடைய தேசங்கள் அந்த முரண்பாடுகளை களைவதை தலையாய கடமையாக கொண்டிருக்க வேண்டும். இந்த முரண்பாடுகள் குறிப்பிட்ட ஒரு தரப்பினருக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. குறிப்பிட்ட ஒரு வர்க்கத்துக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. எனவே அந்த தரப்பினர் முரண்பாடுகளை நிலுவையில் வைத்திருக்கவும் அதை பயன்படுத்தவுமே விரும்புகின்றனர். இன்றுவரை ஈழச் சிக்கல்கள் நதிநீர் பிரச்சனை குறித்த சிக்கல்கள் மீனவர்கள் குறித்த பிரச்சனை எதிலும் இந்தியர் என்ற உண்மையான ஆழுமை பிரயோகிக்கப்படவில்லை. சாதகங்களை அனுபவிக்கும் தரப்பினரின் ஆழுமைகளே முடிவுகளாக அமைகின்றது. இது ஒட்டுமொத்த தேசத்தையும் படிப்படியாக ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்கின்றது.
ஒரு இனம் தாழ்ந்து போவதற்கும் அடிமைப்படுவதற்கும் அந்த இனம் இடமளிப்பதே முதலாவது நிலை. இந்த நிலையை பிரயோகித்தே என்னுமொரு இனம் தனது ஆக்கிரமிபப்பை அதிகாரத்தை குறிப்பிட்ட இனம் மீது செலுத்துகின்றது. இதுவே அன்று ஈழத்தில் எமது நிலை. இதுவே தமிழகத்தில் இன்று நாம் காணும் நிலை. அரசியல் மற்றும் மேலாண்மை ஆதிக்க தரப்புகளின் சுயநலன்களுக்காக ஒரு பெரும் துயரத்துக்கான இடமளிக்கப்படுகின்றது. இந்த இடமளிப்பானதின் விழைவுகளிலேதான் நதிநீர் பிரச்சனைகள் விவசாயிகள் தற்கொலைகள் மீனவர் படுகொலைகள் என்பன தொடர்கின்றது. நாளை என்னும் பல சலுகைகள் தடுக்கப்படலாம். என்னும் புதிய சிக்கல்கள் உருவாகலாம். பிரச்சனைகள் வளர வளர இன்றய ஒரு சீமான் அல்லது அமீர் நாளை நூறாக விரியும். இதுவே எனது தேசத்தில் நான் நேரில் உணர்ந்த வரலாறு.