தந்தையும் தம்பியும் உரையைக் கேட்க
தந்தையும் தம்பியும் உரையைக் கேட்க
This entry was posted on Sunday, December 28th, 2008 at 9:22 pm and is filed under நிகழ்வுகள், பெரியார். You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சை ‘அதிகபட்சமானது’, ‘தேவையற்றது’ என்று கூறியுள்ள இந்தியா, ஏராளமான மக்கள் கொல்லப்பட்ட அத்தாக்குதலை கண்டித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் தென் பகுதி மீது ஹமாஸ் போராளிகள் (இஸ்ரேலைப் பொறுத்தவரை பயங்கரவாதிகள்) நடத்திய ராக்கெட் தாக்குதலில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக கடந்த சனிக்கிழமை முதல் காசா பகுதி மீது இஸ்ரேலிய விமானங்கள் சரமாரியாக பறந்து குண்டு வீசி வருகின்றன.
இதில் 300க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலைக் கண்டித்துத்தான் திங்கட்கிழமை மாலை நமது அயலுறவு அமைச்சகம் ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ‘காசாப் பகுதியில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திவரும் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்படவேண்டும் என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது. இத்தாக்குதலில் அளவிற்கு அதிகமான இராணுவ பலம் பயன்படுத்தப்பட்டதன் விளைவாக ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளது மட்டுமின்றி, வன்முறையும் பெருகிவருவது ஏமாற்றமளிக்கிறது.
இப்படிப்பட்ட தேவைக்கும் அதிகமான படைப்பலம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது தேவையற்றது, கண்டனத்திற்குரியது. காசா பகுதி மீது நடத்தப்பட்டுவரும் இஸ்ரேலின் தாக்குதல், வன்முறையைத் தொடரவே வழிவகுக்கும் என்பது மட்டுமின்றி, அமைதி முயற்சிகளை தடம்புரளச் செய்துவிடும் என்பதால் அதிகபட்ச கட்டுப்பாட்டை (இஸ்ரேல்) கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக்கொள்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை இந்திய அரசு கண்டித்திருப்பது நியாயமானது, அதனை இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். பாலஸ்தீனப் பிரச்சனையிலும், அது தொடர்பாக நமது நாடு கொண்டுள்ள நிலைப்பாட்டையும் அறிந்த எவருக்கும் அந்த அறிக்கையின் ஒவ்வொரு வாக்கியத்திலும் முரண்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை.
காசா பகுதியில் இருந்த இஸ்ரேலின் தென் பகுதி மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதற்காக, அங்குள்ள ‘பயங்கரவாதி’களின் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு இஸ்ரேல் நடத்திவரும் கொலை வெறித் தாக்குதலை நியாயம் என்று (இன்றுள்ள) அமெரிக்க அரசைத் தவிர வேறு எந்த நாட்டு அரசும் ஏற்காது.
அத்தாக்குதலில் 300க்கும் அதிகமான அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதையடுத்து இந்தக் கண்டன அறிக்கையை இந்தியாவின் அயலுறவு அமைச்சகம் விடுத்துள்ளது. நமது கேள்வியெல்லாம், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திவரும் இதேபோன்ற காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத்தானே இன்றும் இலங்கையில் தமிழர்கள் மீதும் சிறிலங்க விமானப் படை நடத்திவருகிறது?
சிறிலங்க விமானப் படை தாக்குதல் நடத்திய பிறகு அந்நாட்டு இராணுவம் எறிகணைகளை வீசியும், பல்குழல் பிரங்கிகளைச் சுட்டும் தாக்குகிறது. இது நீண்ட காலமாக நடந்து வருகிறதே? அதைக் கண்டித்து இந்திய அயலுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை கூட இதுவரை அளிக்காதது ஏன்? கடந்த 25 ஆண்டுகளாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஈழத்தில் இப்படிப்பட்ட தாக்குதல் நடந்துவருகிறதே.
இடையில் 2002 முதல் 2005 ஆம் ஆண்டுவரை போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலம் தவிர, சிறிலங்க விமானப் படை விமானங்கள் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டுதானே இருக்கின்றன? 2005ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபராக ராஜபக்ச பதவியேற்றதற்குப் பிறகு திட்டமிட்டு துவக்கப்பட்ட தாக்குதல் இந்த ஆண்டில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்கு ‘போரை நிறுத்துங்கள்’ என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம் இருந்து தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
அதன்பிறகு, அக்டோபர் 14ஆம் தேதி (இடையில் அக்.06ஆம் தேதி ஆளும் தி.மு.க. கட்சி சார்பாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிற்கு அனுப்பியது, அதனை மயிலை மாங்கொல்லை கூட்டத்தில் விளக்கி முதலமைச்சர் கருணாநிதி பேசினார்) தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழர்கள் மீது சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசை வலியுறுத்த வேண்டும்
என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தலைவராக உள்ள சோனியா காந்திக்கும் அனுப்பப்பட்டது.
அதனைப் பெற்றுக்கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், சிறிலங்க அரசுடன் பேசுவோம் என்றுதான் கூறினாரே தவிர, சிறிலங்க அரசிடம் பேசி தாக்குதலை நிறுத்துமாறு கூறுவோம் என்ற எந்த உறுதிமொழியையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. தமிழர்கள் மீதான தாக்குதலும் நிறுத்தப்படவில்லை. அதன்பிறகு, டெல்லி வந்த சிறிலங்க அதிபரின் ஆலோசகரான ஃபசில் ராஜபக்சவிடமும் மத்திய அரசு பேசியதற்குப் பின்னரும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை.
மாறாக, மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்களால் கதிகலங்கி நிறுத்தியிருந்த விமானப்படைத் தாக்குதலை சிறிலங்கா மீண்டும் துவக்கியது. அப்படியென்றால் அர்த்தமென்ன? தாக்குதலை நிறுத்து என்று சிறிலங்காவிடம் மத்திய அரசு வலியுறுத்தவில்லை என்பதுதானே? இதனை எந்த விதத்திலும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுக்கவில்லை.
‘போர் நிறுத்தம் செய்யுமாறு அண்டை நாட்டை நாம் வலியுறுத்த முடியாது, அது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகிவிடும்’ என்று தமிழக முதல்வரிடம் (செய்தியாளர்களிடமும்தான்) மிக டெக்னிகலாக பேசிவிட்டு மத்திய அரசிற்கு ஆதரவு தொடரும் என்ற உறுதிமொழியை பெற்றுக்கொண்டு பறந்தார்.
தமிழக முதல்வரும், பிரணாப் குழப்பியதை பெரிதாக எடுத்துக்கொண்டு, தன் பங்கிற்கு ஒரு விளக்கம் அளித்தார். ஆனால், அங்கு ஈழத்திலோ தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தமிழக முதலமைச்சர் தலைமையில் டெல்லிக்கு சென்று பிரதமரைச் சந்தித்து தமிழர்கள் மீதான போர் நிறுத்தப்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியபோது கூட, நமது தலைவர்கள் பேசியதையெல்லாம் ஒரு சிலையைப் போல அசையாமல் கேட்டுக்கொண்டிருந்தாராம் நமது பிரதமர்.
தமிழக முதல்வர் குறுக்கிட்டு, அயலுறவு அமைச்சரை சிறிலங்காவிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதை மட்டும் ஒப்புக்கொண்டு பதில் பேசியுள்ளார். ஆனால் இதுவரை பிரணாப் சிறிலங்கா செல்வது உறுதி செய்யப்படவில்லை.
அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறிலங்கா சென்று அதிபர் ராஜபக்சாவை சந்தித்துப் பேசினால் அடுத்த நிமிடம் சிறிலங்h இராணுவம் தாக்குதலை நிறுத்துவிடாது என்பது இங்கேயும் தெரியும், அங்கேயும் தெரியும். ஏனென்றால் தமிழர் பிரச்சனையில் நமது மத்திய அரசிற்கும், சிறிலங்கா அரசிற்கும் ஒரு ‘நல்ல புரிந்துணர்வு’ உள்ளது விவரம் தெரிந்த தமிழர்களுக்குப் புரியாததல்ல.
அதனால்தான், இன்று வரை சிறிலங்கா அரசை, அதன் தமிழர் ஒழிப்புக் கொள்கையை, தமிழர்களுக்கு எதிராக அது நடத்திவரும் இராணுவ ரிதியிலான இன ஒடுக்கலை எதிர்க்கவில்லை. எதிர்த்து ஒரு அறிக்கை கூட விடுக்கவில்லை. காசாவில் உள்ள ‘இலக்குகளை’ குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அங்கேயுள்ள அப்பாவி மக்களை கொல்கிறது என்பதை உணர்ந்து அறிக்கை அளிக்கும் அயலுறவு அமைச்சகத்திற்கு, அதேபோல விடுதலைப் புலிகளின் ‘இலக்குகளை’க் குறிவைத்து அந்நாட்டு விமானப்படை நடத்தும் தாக்குதலில் எத்தனை ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெரியாதா என்ன? தெரியும்.
பிறகு ஏன் கண்டிக்கவில்லை? காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள ‘பார்வை’. அதுதான் நமது அயலுறவு அமைச்சகத்தை வழிநடத்துகிறது. எங்கெல்லாம் மனித உரிமை மீறப்படுகிறதோ அதனையெல்லாம் எதிர்த்துக் கண்டிக்கும் ஒரு ஜனநாயக அரசாகத்தான் இந்தியா இருந்துவருகிறது. அப்படிப்பட்ட கொள்கையை ஒட்டியே நமது அயலுறவு அமைச்சகத்தின் செயற்பாடும் இருந்து வருகிறது.
ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மட்டும், அது காங்கிரஸ் கட்சியின் தற்குறித்தனமான பார்வையால் வழிநடத்தப்படுகிறது. அதனால்தான், ‘இந்த ஒரு ஆண்டில் மட்டும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் மீது 700 முறை விமானத் தாக்குதல் நடத்தியுள்ளோம். அந்தத் தாக்குதல்களில் சில சமயங்களில் 500 கி.கி. எடையுள்ள குண்டுகள் பல வீசப்பட்டுள்ளன’ என்று அந்நாட்டு இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரா பேசியதற்குப் பின்னரும், மத்திய அரசு அதனைக் கண்டிக்கவில்லை.
அது தமிழர்களை விட சிங்களவர்களையும், சிங்கள அரசையுமே நட்பாகக் கருதுகிறது. அந்தத் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்று எத்தனை முறை தமிழ்நாட்டின் தலைவர்கள் வலியுறுத்தினாலும், அது காங்கிரஸ் கட்சிக்கு விளையாட்டாகவே தெரிகிறது. 2004ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தனர். தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுவை மக்களவைத் தொகுதியிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியே வெற்றி பெற்றது.
அந்த 40 மக்களவை உறுப்பினர்களின் பலத்தால் மத்தியில் ஒரு கூட்டணி அரசை ஏற்படுத்தும்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதி தங்கியிருந்த இடத்திற்கே வந்த அவரைச் சந்தித்துப்பேசி சிக்கலின்றி ஆட்சியமைக்க வழிகேட்டவர், இன்றைக்கு ஈழத் தமிழர்களுக்காக, தமிழ்நாட்டின் தலைவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து விடுக்கும் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்ப்பது அப்பட்டமான துரோகமல்லவா?
தமிழக மக்களுக்கு இதெல்லாம் புரியாதா? அங்கே பாலஸ்தீனர்களை இஸ்ரேல் குண்டு வீசி அழிக்கிறது. அதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. இங்கு ஈழத் தமிழர்கள் மீது குண்டு வீசி கொன்றொழிக்கிறது சிங்கள அரசு. அதற்கு மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு ஆதரவளிக்கிறது. உதவுகிறது.
இதனை தமிழர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளார்கள். அரசியல் சித்து வேலைகள் மக்களுக்குப் புரியாது என்று காங்கிரஸ் கட்சி நினைத்துக் கொண்டிருக்கிறது. அது உண்மையல்ல. தமிழக மக்கள் சிந்திக்கக் கூடியவர்கள். 2004ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் அரசு ஏற்பட அனைத்துத் தொகுதிகளிலும் தமிழக மக்கள் ஏகோபித்த ஆதரவளித்தார்கள். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் தமிழினத்திற்கு துரோகம் இழைத்துவரும் காங்கிரஸ் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள்.
மூலம் – (நன்றி இணையம் – துனியா சிறப்பு கட்டுரை)
கிளிநொச்சி ஈழப்போரின் திருப்புமுனை என்று கூறியது சரி என்று நேற்று தான் உணர்ந்தேன்
நேற்று நிலவரப்படி
போராளிகள் யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கவில்லை,
போராளிகள் யாரும் இறந்ததாகத் தெரிவிக்கவில்லை,
போராளிகளிடம் இருந்து ஆயதங்கள் எதுவும் கைப்பற்றப் பட்டதாகத் தெரிவிக்கவில்லை,
போராளிகளின் முக்கிய ஆவணங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கவில்லை,
ஒரு நகரைக் கைப்பற்றிய ராணுவத்தினர் இதுவரை போராளிகளின் ஆயுதங்களையோ, ஆவணங்களையோ, தகவல் தொடர்பு சாதனங்களையோ கைப்பற்றவில்லை என்றால் அதன் அர்த்தம் என்ன?
புலிகள் அந்த நகரை காலி செய்து பல நாட்களாகிவிட்டது.
கிளிநொச்சியை நான்கு புறமிருந்தும் ரானுவம் சுற்றி வளைத்த நிலையில் எப்படி காலி செய்திருக்க முடியும்
1. மந்திரம் மூலம் கூடு விட்டு கூடு பாய்ந்திருப்பார்கள்
2. விமானம் மூலம் சென்றிருப்பார்கள்
3. 6 மாதங்களுக்க முன்னரே காலி (குறைந்த பட்சம் செப்டம்பர் 2008 முன்னர்) செய்திருக்கிறார்கள்
இவ்வளவு நாட்களாக (4 மாதங்களாக ரானுவம் ஒரு பலனற்ற இடத்தை கைப்பற்ற போராடி உள்ளது.
அதை விட சுவாரசியம்
பூநகரியிலிருந்து புலிகள் காலி செய்தது அனைவருக்கும் தெரிந்த வண்ணம் நடந்தது.
கிளிநொச்சியில் இருந்து காலி செய்தது பரம ரகசியமாக நடந்துள்ளதுசில வருடங்கள் கழித்து சனவரி 2, 2009 என்பது அனைத்துலகையும் புலிகள் ஏமாற்றிய தினம் என்று வரலாற்றில் எழுதப்பட்டிருக்கும்
இந்த இடத்தை நம்மால் தக்க வைக்க முடியாது என்று 6 மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்ய கூடிய அளவு வியூகங்களுடன் புலிகள் இருக்கின்றனர் என்பதை பாவம் இப்பொழுது தான் ராஜபக்சே உணர்ந்திருப்பார்.
வருங்காலத்தில் military manoeuvring குறித்த ஆராய்ச்சிகளில் கிளிநொச்சிக்கும் ரானுவம் புகுந்தது முக்கிய விடயமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
6 மாதங்களாக பிரபாகரனின் இசைக்கு தாங்கள் ஆடியுள்ளோம் என்பதை அறிந்து கொண்ட ராஜபக்சே, பொன்சேகா, ராம், நாராயணன் ஆகியோர் தற்சமயம் பயங்கர கடுப்பில் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை
மளமளவெனக் கொட்டும் மலையருவியாய்க் கொட்டோ கொட்டென்று கொட்டிய உங்களின் உரை கேட்டு உயிர்த்தெழுந்தேன். உங்களின் பேச்சை உள்வாங்கிக்கொள்ளும் சக்திகூட எனக்கு இல்லையே என்று ஏங்குகிறேன். அமெரிக்காவில் உங்களைச் சந்தித்தபோது நான் கூறியதுபோல், உங்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல்படத் துடிக்கிறேன். உங்களது தமிழ்த் தேசியப் பணி தொடரட்டும்.
ஜான் பீ. பெனடிக்ட்,
வாசிங்டன் DC
இந்த உரைக்கு மிக்க நன்றி!
தமிழக மற்றும் இந்திய வாக்காளரும் சிந்திக்க வேண்டிய காலம் இது.
உங்கள் பெயர்களை இங்கே குறிப்பிடும் அளவுக்கு நீங்கள் யோக்கியமானவர் அல்ல. அதனால் நீங்கள் நடத்தும் கட்சியின் பெயராலும் அமைப்பு மற்றும் ஆயுதக் குழுக்கள் பெயராலும் நீங்கள் தமிழ் ஈழ மக்களுக்கும் ஒட்டு மொத்தத் தமிழினத்துக்கு செய்த, செய்து வருகிற துரோகங்களை மனித குலம் ஒரு போதும் மன்னிக்காது என்பதை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறோம்.
கிளிநொச்சிக்குள் சிங்கள இனவெறி அரசின் இராணுவம் புகுந்த செய்தியைக் கேட்டுப் பரவசப்படும் உங்களின் மனதில் உள்ள கீழ்த்தரமான உணர்வுகள் பளிச்சிடுவது தெரிகிறது. ~தலைவனைப் பிடித்துத் தாருங்கள் ராஜீவ் காந்தி கொலை பற்றி விசாரிக்க வேண்டும்| என்று சிங்கள அரசிடம் கெஞ்சும் கேவலத்தைச் செய்கிறீர்கள். வெட்கம் கெட்டு ஒரு பிராந்நிய வல்லரசு எனப் பெருமை பேசும் உங்களுக்கு என்ன சிறப்பு இதனால்? உங்கள் படையால் செய்ய முடியாமல் போன ஆற்றாமை உங்கள் கோரிக்கையில் வெளிப்படுகிறது.
ஈராக்கில் அப்பன் புஷ் செய்ய முடியாமல் போன வருத்தத்தில் மகன் புஷ் படையெடுத்து சதாமைக் கொன்றது போன்ற செயலில் நீங்கள் இறங்கி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், ஈழத்தில் எந்த இந்திய அரசு தோல்வி கண்டு போனதோ அதே இந்திய அரசு படை நடத்தி வெற்றி கண்டிருந்தால் அதுவே உண்மை வெற்றி.
ஈழத் தமிழனை இரண்டாம் பட்சமாக நீங்கள் நினைத்து வஞ்சம் தீர்ப்பதை நியாயமாகக் கொண்டாலும், தமிழனாகப் பிறந்து தமிழனாக வாழ்ந்து கொண்டே தமிழ் நாட்டில் அரசியல் நடத்தும் தமிழகக் காங்கிரஸ்காரருக்கு தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்படுவது கூடத் தெரியாமலா போனது? தமிழகத் தமிழனுக்கே துரோகம் செய்வதை விட வேறு நல்ல குணமே இல்லையா?
உலகமறிய இடம் பெற்ற அமைதிப் பேச்சுக்களை, இனவெறிச் சிங்கள அரசுடன் இணைந்து இடைநடுவிலே குழப்பி ஒரு போர்ச் சூழலை உருவாக்கியும், அந்தப் போரை மறைமுகமாக நடத்தியும் ஈழத் தமிழரைக் கொன்றொழிக்க இந்தியக் காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசு மேற்கொண்ட கபடத்தனம் நிறைந்த செயற்பாடுகளை உங்களின் கோரிக்கை இன்று வெளிப்படுத்தி விட்டது.
தமிழகக் காங்கிரஸ் கட்சியினர் உண்மையிலேயே தமிழர்களையும் தமிழகத்தையும் நேசிப்பவர்களாக இருந்தால், நேர்மையான மனித குணம் படைத்திருந்தால், ராஜீவ் காந்தி கொலை விசாரணையை நடுநிலை கொண்ட கமிஷன் மூலம் நடத்தி அதன் மூலம் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிவதை முன்னெடுக்க வேண்டும். ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகள் சந்தேகத்துககு இடமளிக்கும் வகையில் நடைபெற்று உள்ளதாகப் பலராலும் கண்டிக்கப் பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
எனவே, அத்தகைய ஊழல் நிறைந்த விசாரணை முடிவுகளின் அடிப்படையில் இந்திய அரசால் விதிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் கூட நீதிமன்றத்தில் எதுவித எதிர்வாதமும் இல்லாமலே, ஆதாரப்படுத்தப்படாத சாட்சியங்களின் அடிப்படையில் நீடிக்கப்பட்டு வருவதும் கடந்த 17 வருடங்களாக இடம்பெறும் அநீதியாகும். இத்தகைய அநீதியை முக்கியமாகத் தமிழக மக்களுக்கு மறைத்தும், அவர்களின் ஈழத் தமிழர் மீதான உணர்வுகளை மழுங்கடிப்பதற்காகவே பலரைப் பல ஆண்டுகள் சிறைகளில் போட்டும், அல்லது போடுவதாகப் பயமுறுத்தியும் கீழ்த்தர அரசியலை நடத்துவதே காங்கிரசின் சிறப்பாக இருக்க வேண்டுமா?
சிங்கள அரசுகள் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழரின் நிலத்தை, மொழியை, அரசியல், தொழில் மற்றும் கல்வித்துறைகளில் தமிழரின் வாய்ப்புகளைப் பறித்ததால் அவற்றிற்கு எதிராகப் நாம் போராடுவது குற்றமா? அதைத் தடுக்க உங்களின் ராஜீவ் காந்திக்கு யார் கொடுத்தார் அதிகாரம்? ஏம்மைக் காக்க என்று வந்து பின்னர் எமது உயிர் உடமைகளை அழித்துச் சிங்களத்தின் இனவெறி அரசியலுக்கு துணைபோகவா வேண்டும்?
மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழரின் வாக்குரிமையும் குடியுரிமையும் பறிக்கப்பட்டதும் தனிச் சிங்கள அரச மொழிச் சட்டம், உயர் கல்வி வாய்ப்பில் தமிழருக்கு எதிரான தரப்படுத்தல் முறை என்பனவற்றால் தமிழ் இனத்தின் அரசியல் மற்றும் சமூக பொருளாதார வளங்கள் சீரழிக்கப்பட்டதே. இவற்றுக்கு எதிரான உண்ணாவிரதம், மக்களின் சத்தியாக் கிரகம், தேர்தல் புறக்கணிப்பு என எல்லா வகையான அமைதி வழி அரசியல் நடவடிக்கைகளையும் தந்தை செல்வாவின் தலைமையில் கடைப்பிடித்தும் கிடைத்த பலன் என்ன?
30 வருடங்களுக்கு மேலாக மேற்கொண்ட தமிழரின் அரசியல் நடவடிக்கைகளை சிங்கள அரசு தனது தனிச் சிங்களப் பாதுகாப்புப் படைக் கட்டமைப்புகளாலும், சிறப்புச் சட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்பாயங்கள் மூலமாக எதிர்கொண்டதே அது ஜனநாயகப் பண்பா? நேர்மையான நியாயமான நீதி மறுக்கப்பட்டுச் சிறப்புத் தடுப்பு முகாம்களில் சித்திரவதையும் சிறையும் தமிழினத்தின் மீது தொடராகத் திணிக்கப்பட்டபோது அடைக்கலமும் ஆறுதலும் தந்த இந்தியாவும் இந்திரா காந்தியின் கொலையுடன் போனதா?
அன்றே எம்மை அண்ட விடாது விரட்டியிருந்தால் இன்று எமக்கு இந்த இழிநிலையும் உங்களின் எக்காளச் சிரிப்பும் கிடைக்காதே. இலங்கை அரசின் வன்முறைக்கு எதிராக முகங்கொடுக்க முடியாது தத்தளித்த தமிழர் தலைவர்கள் தமிழகத்தையும் இந்திய மத்திய அரசையும் நாடியதும் எதற்கு? தாய்-சேய் உறவு, தமிழ் என்ற தொப்புள் கொடித் தொடர்பு என்ற துணிவில்தானே நாடி ஓடி வந்தோம். இந்த வகையில் இன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 1960 களில் இருந்தே முக்கிய தமிழகப் பிரமுகராகத் திகழ்ந்தவர்தானே.
அவருடைய முக்கிய சகாவான திரு. அப்பாப்பில்ளை அமிர்தலிங்கம் கொலையுண்டமை அவருக்கு மன்னிக்கப்பட முடியாத குற்றமாகப்படலாம். அதே போன்றே அவரின் கையாள் போன்று நடந்துகொண்ட பத்மநாபாவின் கொலையும் அவருக்குத் தென்படுவதில் ஆச்சரியமே இல்லை. ஆனால், ஈழத் தமிழரின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்கப் முன்னின்று விட்டுப் பின்னர் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கும் துரோகத்தைச் செய்தவர்களில் மேற்குறிப்பிட்ட இருவரும் முக்கிமானவர்கள். எனவே, இவர்களின் மரணம் ஈழத் தமிழரைப் பொறுத்தவரை கவலைக்குரியதல்ல என்பதே உண்மை நிலை.
அதற்காக இவர்களின் கொலைகளைக் காரணம் காட்டிச் சிங்களத்தின் தமிழின அழிப்புக்கு இன்று கலைஞர் துணைபோவது ஒரு இனப்பற்று மிக்க மனிதருக்கு எப்படிப் பொருந்தும்? எனவே கலைஞரும் அவரது மகள் கனிமொழியும் எவ்வளவுதான் ஆறுதல் மொழியோ அடுக்கு மொழியோ பேசினாலும், ஈழத் தமிழர் மீதான சிங்களத்தின் இன அழிப்புப் போருக்கு முடிவு காண்பதும், அவர்களுக்கான தாயக மீட்புக்கு உதவதும் போன்ற வேறு ஒரு சிறந்த பணி இருக்க முடியுமா? இவற்றை இவர்கள் முழுமூச்சாகச் செய்து முடிக்காமல் என்னதான் பேசினாலும் அவை எல்லாம் வெத்து வேட்டுக்களாகவே இருக்கும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்னார் மற்றும் வன்னிப் பிரதேசங்களின் மீது 1700 தடவைகளுக்கு மேலாக விமானக் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக இலங்கை விமானப்படை கூறியிருக்கிறது. தொடர்ந்தும் இவற்றை நடத்திக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தடவையும் குறைந்தது நான்கு குண்டுகளை வீசுவதாகக் கணக்கிட்டாலும் மொத்தம் 6,800 குண்டுகள் வீசப்பட்டுள்ளமை புலனாகும். இவை ஒவ்வொன்றும் சராசரியாக 500 கிலோ வெடிப்பொருளைக் கொண்டுள்ளன. இவற்றைவிடப் பல்குழல் பீரங்கிகள், இரவு பகலாக வீசப்படும் எறிகணைகள் என்பவற்றின் எண்ணிக்கையோ 2 இலட்சத்தையும் கடந்து இன்னும் தொடருகின்றன. இத்தனைக்கும் இப்பிரதேசத்தின் பரப்பளவோ வெறும் 50 சதுர மைல் விஸ்தீரணம் கூட இல்லை.
இவை அழித்து வரும் மனிதர் மற்றும் கால் நடை உட்பட்ட பல்வேறு உயிரினங்கள், வன வளம் மற்றும் தாவர வளங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. வெளியேற்றும் நச்சுப் புகைகளும் வாயுக்களும் எத்தகைய உயிராபத்தை விளைவிப்பவை என்பதை வெளி உலகத்துக்குத் தெரிய விடாது ஐ.நா. தொண்டர் அமைப்புக்கள் உட்பட எவருமே அங்கு போக முடியாதவாறு அரசு தடை செய்து உள்ளது. மரங்கள் முறிந்தும் எரிந்தும் அனைத்து இயற்கை வளங்களும் அழிக்கப் பட்டு விட்டன. அமைதிக் காலத்தில் புலிகளினால் நடைமுறைப் படுத்தப் பட்டு வளர்த்த பனை மரங்கள் அரச படைகளின் காவல் அரண்களில் மரணித்துக் கிடக்கின்றன. கரையோர மண்ணரிப்புக்கு எதிராக வளர்க்கப்பட்ட பல இலட்சம் சவுக்கு மரங்கள் பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறி இராணுவத்தால் அழிக்கப்பட்டு விட்டன.
மூன்று இலட்சம் வரையான மக்கள் தொடர் இடப்பெயர்வுகளால் அகதிகளாகி அல்லல் பட்டு வருகின்றனர். உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டவர்களாய் இரவு பகல் குண்டு மற்றும் எறிகணை வீச்சுக்களுக்கு முகம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். உழைப்பும் ஊதியமும் மறுக்கப்பட்டு உளவுரண் சிதைக்கப்பட்டு உயிர்ப் பறிப்புக்கும் ஊனப்படுத்தலுக்கும் இரத்தமும் சதையும் நித்தமும் சிந்தும்: வாழ்வுக்கும் தள்ளப்பட்டு பாம்புக்கடிகளாலும் வதைபடும் சோகம் எவருக்குமே புரியாதவை.
கிளிநொச்சி பிடிக்கப் படும் வரை ஊமையாய் இருந்துவிட்டுக் கிளிநொச்சி பறிபோனதும் பிரபாகரனையும் பிடித்துத் தாருங்கள். எங்கள் தலைவர் ராஜீவ் காந்தியின் உயிரைப் புலிகளே பறித்தனர் அதனால் புலிகளின் தலைவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் வீரப்ப மௌலி அறிக்கை விட்டுள்ளார். இத்தனை காலமும் அரசியல் தீர்வு என அறிக்கை விட்டு இந்திய மத்திய அரசும் காங்கிரசும் ஆடிய நாடகம் இப்போது எங்கே போனது? அப்படியானால் வழக்கு எனக் கூறி 26 பேருக்கு மரண தண்டனை விதித்தீர்களே அந்த வழக்கு யாருக்காக ஏன் நடத்தப்பட்டது?
இத்தனை வருடங்கள் கண்ணை மூடிப் பாசாங்கு காட்டிய மர்மம் என்ன? இந்தியக் காங்கிரஸ் கட்சி உண்மையான நீதி விசாரணையை விரும்புவதாக இருந்தால் ஒரு சர்வதேச விசாரணைக்கு இந்த வழக்கை எடுத்துப் போயிருந்தால் அதன் உண்மை நோக்கம் தெளிவாகத் தெரியும். ராஜீவ் காந்தி கொலையில் பல வெளிநாட்டு அரசுகளும் உள்நாட்டு அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்டிருப்பதும் அதன் விசாரணையில் பல மோசடிகள் இடம்பெற்றிருப்பதும் பலராலும் வெளிப்படுத்தப்பட்டும் அவை பற்றி எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாதது ஏன்?
தற்கொலைதாரி ஒரு ஈழத் தமிழர் என்பதாலும் அதனைப் புலிகளே செய்திருப்பர் என்ற கோணத்தில் வழக்கின் திசை திருப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் இப்போதும் வெளியாகும் நிலையில் எப்படிப் பழியைப் புலிகள் மீது சுமத்தலாம்? புலிகளை இந்திய நீதி மன்றத்தில் சமூகம் அளிக்கவோ அவர்கள் சார்பாக எவரும் வாதிடவோ முடியாதபடி தடைசெய்து விட்டு அந்தத் தடையை இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை புதுப்பித்து அதுவே நீதி எனக் கொக்கரிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
ஈழத் தமிழர் அழிவையும் இந்தியத் தமிழ் மீனவர் அழிவையும் செய்து வரும் இலங்கையின் சிங்கள அரசின் கைக் கூலிகளாக இருந்து சொந்த நாட்டையும் சொந்த இனத்தையும் காட்டிக் கொடுக்கும் தமிழ் நாட்டுக் காங்கிரசுக்கும் கட்ட பொம்மன் ஊமைத்துரையைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? இத்தோடு புலிகள் இயக்கமும் ஈழத் தமிழினமும் அழிந்து போகலாம், ஆனால் உங்களின் ஈனப் புத்தியால் உங்களின் இந்தியத் தாய்த் திருநாடும் அழிந்து போவது உறுதியாகத் தெரிகிறது. வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் ஆபத்தான எதிரிகளையும், தெற்கிலே ஒரு ஆபத்தான நண்பனாகச் சிங்களவனையும் தேடிக்கொண்டு விட்ட பின் தென் இந்தியாவுக்கும் எந்த அளவுக்குப் பாதுகாப்பும் அமைதியும் கிடைக்கும் என்பதை உணரும் அறிவு இருந்தால், தமிழக மற்றும் இந்திய வாக்காளரும் சிந்திக்க வேண்டிய காலம் இது.
kindly watch this video given in this linkhttp://melbkamal.blogspot.com/2009/01/blog-post_5556.html
no tamil politician taking care about tamil pepole except thiruma