கல் நெஞ்சும் கரையும்…

November 12, 2008

உங்களுக்குப் பிடித்த இசைப்பாடல் ஒன்று சொல்லுங்களேன்.

– செந்தூரன், அண்ணாநகர், சென்னை-40.

MIDEAST ISRAEL PALESTINIANS

சுப.வீ பதில் : தமிழீழக் கரையோர மீனவ மக்களின் வாழ்க்கை அவலத்தைச் சொல்லும், புதுவை இரத்தினதுரையின் பாடல். “வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் கடல்/வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்” என்று தொடங்கும்,

“ஊருறங்கும் சாமத்திலே யாருமற்ற நேரத்திலே
காரிருட்டில் படகெடுத்துப் போவோம் – நேவி
கண்டுவிட்டால் கடலில் நாங்கள் சாவோம்.
பேருமின்றி ஊருமின்றிப் பெற்றவளின் முத்தமின்றி
ஈரவுடல் கரையதுங்கும் காலை – புலி
இந்தநிலை மாற்றிடுவான் நாளை”

என அந்தப் பாடல் தொடரும் போது, கல் நெஞ்சும் கரையும்.***

Advertisements